India
“கொரோனா நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு மனநல நோய் தாக்கும்” : மருத்துவ ஆய்வறிக்கை எச்சரிக்கை!
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஜனவரி 30 ஆம் தேதி முதல் கொரோனா தொற்று கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் முதலில் கண்டறியப்பட்டது. ஊகானிலிருந்து திரும்பிய மாணவிக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் மூலமாக பல மாநிலங்களிலும் படிப்படியாக கொரோனா பரவியது. மார்ச் 16 ஆம் தேதி நூறு பேருக்கும், மார்ச் 30 ஆம் தேதி ஆயிரம் பேருக்குமாக உயர்ந்தது. தற்போத மூன்றரை மாதங்களில் பாதிப்பு ஒரு லட்சமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு மனநிலை பிரச்சனை ஏற்படும் என தி லான்செட் சைக்கியாட்ரி இதழின் ஆய்வு கட்டுரை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தி லான்செட் சைக்கியாட்ரி’ என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், ‘வழக்கமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 4ல் ஒருவர் மனநிலை பிரச்னைக்கு ஆளாவது வழக்கமான ஒன்று.
இவ்வாறு ஏற்படும் மனநல பிரச்னையால் அந்த நோயாளி உயிரிழக்கும் வாய்ப்பும் உள்ளது அல்லது நோய் குணமடைவதை தாமதமாகிறது. கொரோனா சிகிச்சைக்கு பின் குணமடைந்த நபர் தீவிர மனஅழுத்தம், மன உளைச்சல், பதற்றம் போன்றவற்றுக்கு உள்ளாகலாம்.
அதுமட்டுமின்றி, மனக்குழப்பம், ஞாபக மறதி பிரச்னையும் ஏற்படும். இதனால் அவர்களை வீடியோ கால், செல்ப்போன் மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பேச வைத்தால் மனநலம் மேம்படும் என தெரிவித்துள்ளது.
Also Read
-
சிறுநீரக முறைகேடு - பாரபட்சமின்றி அரசு நடவடிக்கை : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
-
“கடன் சுமையை பற்றி பேச அதிமுகவுக்கு தார்மீக உரிமை இல்லை” : பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்!
-
ரூ.18.1 கோடியில் பல்நோக்கு விளையாட்டரங்கங்கள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“என் பள்ளி! என் பெருமை!” போட்டிகள்! : வெற்றி பெற்றவர்கள் சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கிய அமைச்சர்கள்!
-
ஃபாக்ஸ்கான் முதலீடு : சட்டபேரவையில் விளக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!