India
“தேர்தல் முறைகேடு அம்பலம் : பா.ஜ.க அமைச்சரின் வெற்றி செல்லாது” - குஜராத் நீதிமன்றம் அதிரடி!
கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. தேர்தலில் வாக்குப்பதிவின்போது பல்வேறு குளறுபடிகளை ஆளும் பா.ஜ.க செய்ததாக ஊடகங்களில் செய்து வெளியானது.
அந்தத் தேர்தலில் டோல்கா தொகுதியில் பா.ஜ.கவின் பூபேந்திரசின் சுதஸ்மா போட்டியிட்டார். வெறும் 327 வாக்குகள் வித்தியாசத்தில் பூபேந்திரசின் சுதஸ்மா காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அஷ்வின் ரதோடை வீழ்த்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே குஜராத்தில் பா.ஜ.க அரசு அமைந்தபோது அம்மாநில சட்டத்துறை மற்றும் கல்வித்துறைஅமைச்சராக பூபேந்திரசின் சுதஸ்மா பொறுப்பேற்றார். இதனிடையே, 2017 தேர்தலில் டோல்கா தொகுதியில் தேர்தலில் 429 தபால் ஓட்டுகள் செல்லாதவை என தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இந்த தேர்தலில் ஓட்டுகளை, விதிகளை மீறி தேர்தல் அதிகாரி செல்லாது என்று அறிவித்ததாகக் கூறி, காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட அஷ்வின் ரதோட் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். 2018ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 78 முறை விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம், அஷ்வின் ரதோட் மற்றும் சுதஸ்மா தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு குஜராத் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு விசாரணை முடிந்து குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
அந்த தீர்ப்பில், பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட பூபேந்திரசின் சுதஸ்மாவின் வெற்றி செல்லாது என அறிவித்துள்ளது. இதனையடுத்து அவர் பதவி இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. சுதஸ்தமாவுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!