India
“ஊரடங்கு இப்படியே நீடித்தால் இந்தியப் பொருளாதாரம் பேரழிவுக்குச் செல்லும்” : எச்சரிக்கும் ரகுராம் ராஜன் !
கொரோனா பேரிடர் காலத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முன்னாள் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனிடம் வீடியோ நேர்காணலில் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அப்போது பதில் அளித்து பேசிய ரகுராம் ராஜன், மக்களை முடக்கத்தில் வைத்திருப்பது எப்போதும் எளிதானதுதான். ஆனால் அது பொருளாதாரத்திற்கு நிலையான பாதையாக இருக்காது. இந்திய நாட்டின் ஏழைமக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பற்றுவதற்கு நமக்கு 65,000 கோடி ரூபாய் தேவை என அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல், ஊரடங்கு காலத்தில் ஊரடங்கைத் தளத்துவதில் நாம் புத்திசாலிசத்தனமாக இருக்கவேண்டும். செயல்பாடும் அதனையோட்டி அமையவேண்டும்.
குறிப்பாக நீண்ட நாட்களுக்கு மக்களுக்கு உணவளிக்கும் திறன் இந்தியாவிற்கு இல்லாததால் நாம் ஊரடங்கை கட்டுபாடுகளை படிப்படியாக தளர்த்தவேண்டும். இதுபோன்று கட்டுபாடுகளை தளர்த்தும்போது, யாரேனும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்.
மேலும் கொரோனா தொற்றுக்கு பின்னர் மேற்கொள்ளவேண்டிய மீட்பு நடவடிக்கை குறித்து வல்லுநர்களிடம் ஆலோசனை பெறவேண்டும்.எவ்வாறு பொளாதாரத்தை நாம் ஒன்றாக பாதுகாக்கப்போகிறோம் என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும்.
இன்னும் 3-வது அல்லது 4-வது ஊரடங்கு கொண்டுவந்தால் பொருளாதாரம் பேரழிவுக்குச் செல்லும். மேற்கத்தியநாடுகளுடன் ஒப்பிடும் போது நிதி மற்றும் பணமதிப்பு நமக்கு அளவானதுதான். ஆதலால், சிறந்த வழியில் பொருளாதாரத்தை நாம் எவ்வாறு மக்களுக்கு திறந்து விடப்போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!
-
“நலம் காக்கும் ஸ்டாலின் “ திட்டம் : 800 முகாம்கள் - 12,34,908 பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!