India

“முதலில் நிதியை தாருங்கள்; கைதட்டுவதும், விளக்கு ஏற்றுவதும் தீர்வாகாது”:புதுவை முதல்வர் நாராயணசாமி சாடல்!

சீனாவில் தொடங்கிய கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிகத் தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் இதன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவது நாட்டு மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,288 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால் இதைப்பற்றி பெரிதாக பேசாத பிரதமர் நாட்டுமக்களிடையே மோடி இன்று இரவு 9 மணியில் இருந்து 9 நிமிடங்களுக்கு வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு ஏற்றும்படி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இவரின் வேண்டுகோளை ஏற்று பலரும் விளக்கேற்றினர். பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று தனது வீட்டின் விளக்குகளை அணைத்தும் விட்டு வீட்டு மாடியில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு நின்றிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, “பிரதமரின் வேண்டுகோளின் படி, மக்கள் தங்களின் ஒற்றுமையைக் காட்டியுள்ளனர்.

அதேவேளையில் நோய் தொற்று அதிகரித்து வருவதால் நாட்டுமக்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றியும் மோடி யோகிக்கவேண்டும். விளக்கு ஏற்றுவதாலோ, கைதட்டுவதாலோ கொரோனாவிற்க்கு தீர்வு காண முடியாது.

அதற்கு மாற்றாக, சிகிச்சைக்கு வெண்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்களை கிடைக்கசெய்யவேண்டும். மக்களுக்கு கொடுக்கவேண்டிய நிவாரணம் முதல் மாநில அரசுக்கு கொடுக்கவேண்டிய நிவாரணத்தை உடனே அளிக்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: கொரோனாவை விரட்ட விளக்கை ஏற்ற சொன்ன மோடி : ஊரை எரித்த ஆர்வக்கோளாறுகள்! - (வீடியோ)