India
#CoronaAlert : அச்சத்தில் பொதுமக்கள் - கொரோனா பரவாமல் இருக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ள கட்டுப்பாடுகள்!
உலக நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதனால், மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில், மார்ச் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, வணிக வளாகங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை கொரோனா முன்னெச்சரிக்கையாக, கட்டுப்பாடுகள் விதித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், 1) பள்ளி, கல்லூரிகளை மூடவேண்டும். ஜிம், அருங்காட்சியகம், சமூக நலக் கூடங்கள், நீச்சல் குளங்கள், திரையரங்குகளை மூட வேண்டும். மாணவர்களை வீட்டிலேயே இருந்தபடி ஆன்லைன் மூலம் படிக்க அறிவுறுத்த வேண்டும்.
2) முடிந்த வரையில் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும். நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்வுகளை மட்டும் நடத்தலாம். அதுவும் ஒவ்வொரு மாணவர்களையும் ஒரு மீட்டர் அளவுக்கு இடைவெளிவிட்டு உட்கார வைக்க வேண்டும்.
3) பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்ற நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டும். அலுவலகக் கூட்டங்களை வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் நடத்த வேண்டும். அதிக அளவில் பணியாளர்கள் எண்ணிக்கை அடங்கிய ஆலோசனை கூட்டங்களை ஒத்திவைக்க வேண்டும்.
4) உணவகங்களில் கிருமிநாசினி கொண்டு கைகழுவும் நடைமுறையை ஊக்குவிக்க வேண்டும். கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு இருக்கைகளுக்கும் இடையே ஒரு மீட்டர் கட்டாய இடைவெளி வைக்கவேண்டும்.
5) ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்வுகளை குறிப்பிட்ட அளவு கூட்டங்களைக் கொண்டே நடத்தவேண்டும். தேவையற்ற கலை நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க வேண்டும். அதிகளவில் மக்கள் கூடும் விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும்.
6) மாவட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகள் மக்கள் அதிகம் கூடும் கூட்டங்களுக்கு அனுமதியளிக்காதவாறு அரசியல் கட்சித் தலைவர்களிடம் பேசவேண்டும். வணிகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி சந்தையில் செய்யக்கூடியவை, கூடாதவையை எடுத்துரைக்க வேண்டும்.
7) வாடிக்கையாளர்கள் வணிகர்களிடையே ஒரு மீட்டர் அளவுக்கு இடைவெளி மேற்கொள்ள வேண்டும். அநாவசியமாக பயணம் மேற்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.
8) பேருந்துகள், ரயில்கள், விமான நிலையங்களில் தொற்று ஏற்படாத வண்ணம் கிருமிநாசினிகளை விநியோகிக்க வேண்டும்.
9) மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் குறித்த தேவையான நெறிமுறைகளை மருத்துவப் பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் மருத்துவமனைகளில் நோயாளிகளின் குடும்பத்தினரை தங்கவிடக்கூடாது. குறிப்பாக குழந்தைகள்.
10) உடல் ரீதியான மற்றும் சுகாதார ரீதியாக இடைவெளியைப் பராமரிக்க வேண்டும். வரவேற்பதற்காக கை குலுக்குவதோ, கட்டிப்பிடிப்பதோ அறவே கூடாது.
11) ஆன்லைன் டெலிவரி செய்யும் பெண்கள்/ஆண்களுக்கு உரிய மற்றும் சிறப்பு பாதுகாப்புகள் அளிக்கப்பட வேண்டும்.
Also Read
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!
-
“2026 முதல் தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடுத்த பார்ட் தொடங்கப்போகிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
கள்ளக்குறிச்சியில் 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!