India

“இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது; ஏன் தெரியுமா?”-பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு தங்கம் தென்னரசு பதிலடி!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு நடைபெற்று வருகின்றது. இந்த கூட்டத்தொடரில் தொகுதி மக்களுக்காக சட்டப்பேரவையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் பேசிவருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிக்கல்வி, உயர் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் ஆகிய துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, சமச்சீர் கல்வியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று குற்றம்சாட்டிய அமைச்சர் செங்கோட்டையனுக்கு பதில் அளித்துப் பேசிய தங்கம் தென்னரசு, “சமச்சீர் கல்வி திட்டம் தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தார்.

சமச்சீர் கல்வி எந்த வகையிலும் மாணவர்களைப் பின்னோக்கிக் கொண்டுசெல்லவில்லை என உச்சநீதிமன்றம் அப்போது அறிவித்தது. இதையடுத்து இதே சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சமச்சீர் கல்வியை ஏற்றுக்கொண்டார். சமச்சீர் கல்வி வந்தபிறகு அதிகப்படியான மாணவர்கள் மருத்துவர்கள், பொறியாளர்கள் என பல்வேறு படிப்புகளில் சிறந்து விளங்கினார்கள்.

தற்போதைய பாடத்திட்டத்தை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது என அமைச்சர் தெரிவித்தார். ஆமாம், இந்தியாவை திரும்பிப் பார்க்கிறது. ஏனென்றால், ஆயிரக்கணக்கான மருத்துவர்களை பொறியாளர்களை வழங்கிய தமிழகம், பல வெளிநாடுகளில் உயர்பதவிகளில் அமரவைத்த தமிழகத்திலிருந்து, இன்றைய கல்வி முறையில் ஒருவர் கூட மருத்துவராகவோ, சிறந்த பொறியாளராகவோ இல்லையே என இந்தியாவே தமிழகத்தை திரும்பிப் பார்க்கிறது” எனத் தெரிவித்தார்.

Also Read: “கொரோனாவால் பாதிக்கப்பட்ட தமிழர்களை மீட்க முதல் குரல் கொடுத்தது தி.மு.க தான்”: சரவணன் MLA பெருமிதம்!