India
“Yes வங்கியை தொடர்ந்து சிக்கலில் LVB?” : RBI உதவியை நாடிய லட்சுமி விலாஸ் - கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!
வாராக்கடன் அதிகரித்ததால் தனியார் வங்கியான ‘யெஸ் வங்கி’ கடுமையான நிதிச் சிக்கலில் தவித்துவந்தது. இந்நிலையில் ‘யெஸ் வங்கி’ முழுவதையும் ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக கடந்த வாரம் அறிவித்தது.
அதனையடுத்து தற்போது வெளியான தகவலின்படி, லட்சுமி விலாஸ் வங்கியை (LVB) மற்றொரு தனியார் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக லட்சுமி விலாஸ் வங்கியை இனைத்துக்கொள்ள கோட்டக் மஹிந்திரா வங்கி, டில்டன் பார்க் ஆகிய இரண்டு தனியார் வங்கிகளும் கையகப்படுத்த முயற்சித்து வருகின்றன. ரிசர்வ் வங்கியால் கைப்பற்றப்படுவதற்கு முன்னர் யெஸ் வங்கியில் முதலீடு செய்ய களத்தில் இருந்த முதலீட்டாளர்களின் பட்டியலில் டில்டன் பார்க் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வங்கித் துறையைக் கண்காணிக்கும் ஆய்வாளர் ஒருவர், “சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்ட அதிக காலம் எடுத்துக்கொள்ளும். அதற்கு ஏற்கனவே இருக்கும் ஒரு வங்கி சிக்கலில் இருக்கும் வங்கியை எடுத்துக்கொள்வது எளிதானது. சர்வதேச முதலீட்டாளர் வர வாய்ப்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, லட்சுமி விலாஸ் வங்கி வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் 49-60% பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 1,800-2,200 கோடி ரூபாய் திரட்ட முடியும் என்றும், இதற்கு உதவி செய்யுமாறு இந்திய ரிசர்வ் வங்கியையும் அணுகியுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அரசு அல்லது ரிசர்வ் வங்கியின் முன் ஒப்புதல் இல்லாமல் தனியார் வங்கியின் கீழ் 49% வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
49% க்கும் அதிகமாக முதலீடு செய்ய அரசின் முன் ஒப்புதல் தேவை. நீண்டகால முதலீட்டாளர்களுக்கு லாக்-இன் காலம் என்ற கட்டுப்பாடு உள்ளதால் அதிலிருந்து விலக்கு உள்ளிட்டவைக்கு உதவுமாறு லட்சுமி விலாஸ் வங்கி ரிசர்வ் வங்கியை அனுகியதாகக் கூறப்படுகிறது.
லட்சுமி விலாஸ் வங்கியின் இந்தக் கோரிக்கையை அடுத்து அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் தங்களின் முதலீடுகளையும் திரும்பப் பெற முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!