India
காங்கிரஸிலிருந்து ஜோதிராதித்யா சிந்தியா நீக்கம் : 19 MLAக்கள் ராஜினாமா முடிவு - தள்ளாட்டத்தில் ம.பி அரசு!
மத்தியில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க, மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி வருகிறது. தேர்தலில் தோற்றாலும், பெரும்பான்மை கொண்ட கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது, கூட்டணிக் கட்சிகளிடம் பேரம் பேசுவது போன்ற கீழ்த்தர அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் தங்களது வேலையைக் காட்டத் துவங்கியுள்ளது பா.ஜ.க. சமீப சில நாட்களாகவே மத்திய பிரதேச எம்.எல்.ஏ-க்களிடம் பா.ஜ.க பேரத்தில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா பா.ஜ.க-வின் வஞ்சக வலைக்குள் சிக்கியுள்ளார். ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் அரசு மீது அதிருப்தியடைந்துள்ள நிலையில், பெங்களூரு பண்ணை வீட்டில் ரகசியமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பதவி வழங்கி சமாதானப்படுத்துவதற்கு ஏதுவாக கமல்நாத் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்தனர். இதனால், மத்திய பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், ஜோதிராதித்யா சிந்தியா, டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்தார். தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்துப் பேசினார். இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் ஜோதிராதித்யா சிந்தியாவை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது காங்கிரஸ்.
சற்று நேரத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து தாம் விலகுவதாக அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு ஜோதிர் ஆதித்யா சிந்தியா கடிதம் அனுப்பியுள்ளார்.
ராஜினாமா கடிதத்தில், “முன்னேறிச் செல்ல வேண்டும் என்றால் புதிய தொடக்கம் அவசியம். இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து பதவி விலகுகிறேன்.’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியதன் மூலம், ஜோதிர் ஆதித்யா சிந்தியா பா.ஜ.கவில் இணைவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இதற்கிடையே, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.
230 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் 214 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் கட்சி சுயேட்சைகளின் ஆதரவோடு ஆட்சியமைத்து வந்தது. தற்போது எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவால் காங்கிரஸ் அரசுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!