India
“15 மாதங்களில் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி” : அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறும் அபாயம்!
இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலைவாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன.
குறிப்பாக, தொடர்ந்து அடிவாங்கும் பங்குச் சந்தைகள், ஜி.டி.பி வீழ்ச்சி காரணமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் மிகக் கடுமையாக வீழ்ச்சி கண்டுள்ளது.
செவ்வாயன்று காலை, ரூபாயின் மதிப்பு 72 ரூபாய் 22 காசுகளாக இருந்தது. இது மாலையில் 73 ரூபாய் 30 காசுகளாக வீழ்ச்சி கண்டது. கடைசியாக 2018 நவம்பர் 12 அன்றுதான், ரூபாய் மதிப்பு இந்த அளவிற்கு மோசமாக வீழ்ச்சியைச் சந்தித்து இருந்தது.
தற்போது 15 மாதங்களுக்குப் பிறகு 73 ரூபாயைத் தாண்டியுள்ளது. புதன்கிழமையன்றும் ரூபாய் மதிப்பில் பெரிய முன்னேற்றம் எதுவுமில்லை. 73 ரூபாய் 20 காசுகளாக இருந்தது. இது, கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சியாகும்.
அதுமட்டுமின்றி, சீன நாட்டின் யுவான் மதிப்பும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. அதனால் இந்திய பங்குச்சந்தையும் பாதிப்பை சந்திக்கிறது. இதற்கு அந்நிய முதலீடுகள் இந்திய பங்குச் சந்தையிலிருந்து வெளியேறியதே ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கியக் காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இந்திய பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள்படி சமீபத்தில் அந்நிய முதலீட்டாளர்கள் 971 கோடி டாலர் அளவுக்கு தங்களது முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர். மறுபுறம் அமெரிக்க டாலர் மற்றும் ஜப்பானிய ‘யென்’னில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.
கச்சா எண்ணெய் விலையேற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்தியாவில் பொருளாதாரச் சிக்கல் இல்லை என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பா.ஜ.க-வினர் கூறிவருகின்றனர்.
Also Read
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!
-
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ்நாட்டை கட்டமைக்கும் திராவிட மாடல்: UmagineTN- துணை முதலமைச்சர் உதயநிதி
-
ரூ.13.81 கோடியை விடுவிக்க வேண்டும் : ஒன்றிய அரசின் வாரிய கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் வலியுறுத்தல்!
-
நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க.. ரூ.4.5 கோடி மோசடி.. பதுங்கியிருந்த பாஜக நிர்வாகியை தட்டி தூக்கிய போலீஸ்!