India

“மாட்டு சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தும்” : யோகியைத் தொடர்ந்து பா.ஜ.க எம்.எல்.ஏ உளறல் பேச்சு!

சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 3000த்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். 80,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 25-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது.

பெரும்பாலான உலக நாடுகள் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் இரண்டு பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்படும் வேலையில், தற்போது இந்தியாவில் ஹெச்.1.என்.1.(H1N1) எனப்படும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு வெகுவாகப் பரவிவருகிறது. இதனால் மக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்துவரும் வேலையில், இந்தியாவில் சில கும்பல்கள் கொரோனாவை பயன்படுத்திக் கல்லாக்கட்டும் வேலையில் இந்த மூலிகை சாப்பிட்டால் கொரோனா வராது, இதனை செய்தால் வராது போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, ஆளும் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் கொரோனாவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் பிற்போக்கு கருத்துகளை மக்கள் மத்தியில் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தின் முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத், “ஒருவர் யோகா செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் அவர்கள் கொரோனா வைரஸ் உள்ளிட்ட தாக்குதலுக்கு பயப்படவேண்டாம்” என பேசினார்.

அவரின் இந்த பேச்சுக்கு மருத்துவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துவரும் வேலையில், பசுவின் சிறுநீர், சாணம் ஆகியவற்றின் மூலம் கொரோனா வைரஸை குணப்படுத்த முடியும் என மற்றொரு பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

சட்டமன்றத்தில் ஒரு பிற்போக்கு கருத்துத் தெரிவிக்கும் வகையில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ-விற்கு பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். என்று நமக்குத் தெரியும். அதனால் பசுவின் சாணத்தையும், கோமியத்தையும் பயன்படுத்தி கொரோனா வைரஸை குணப் படுத்தப் பயன்படுத்த முடியும்.

கொரோனா வைரஸ் காற்றில் பரவுதால் அதை கட்டுப்படுத்த பசுவின் சிறுநீரைத் தெளிப்பதன் மூலம் தடுக்க முடியும். நம் முன்னோர்கள் பலர் கோமியத்துடன் பால், தேன் கலந்து பஞ்சாமிர்தமாக சாப்பிட்டு ஏராளமான நோய்களை குணப்படுத்தியிருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்தில் ஒரு பிற்போக்கு கருத்துத் தெரிவிக்கும் வகையில் பேசிய பா.ஜ.க எம்.எல்.ஏ-விற்கு பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர்.

Also Read: இந்தியாவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு - தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமா அரசு?