India
இன்று முதல் மீண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் : டெல்லி வன்முறை, CAA பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்
நடப்பு நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை கடந்த ஜனவரி 31ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து, பிப்ரவரி 11ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் முதற்கட்டமாக நடைபெற்றது.
அதன் இரண்டாவது அமர்வு இன்று (மார்ச் 2) முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இன்று தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் டெல்லியில் நடைபெற்ற வன்முறை, CAA உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் என பல விவகாரங்களை முன்னிறுத்தி பொருளாதாரம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் தீவிரமாக கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளன.
மேலும், வடகிழக்கு டெல்லியில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மீது நடவடிக்கை எடுத்து அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், கலவரத்தை தடுக்கத் தவறிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்த உள்ளனர்.
இந்நிலையில், டெல்லிக்கு செல்வதற்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, ஜனநாயக வழியில் அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமிய மக்கள் மீது திட்டமிட்ட வன்முறை வெறியாட்டம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
மக்கள் நலனுக்காகவும், அவர்களின் பிரச்னைகளுக்கும் குரல் கொடுக்காமல், தான் எடுத்த முடிவில் மோடி அரசு பிடிவாதமாக இருக்கிறது. இந்த போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். CAA குறித்தும், டெல்லியில் நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்தும் ஐ.நா பொதுச்செயலாளர் வருத்தம் தெரிவித்துள்ளார். நிச்சயம் இந்த கூட்டத்தொடரில் இதுதொடர்பாக கடுமையாக எதிர்க்கட்சிகள் விவாதத்தை ஏற்படுத்தும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!