India
#CAAவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றிய முதல் கிராமம் : ஒரு முஸ்லிம் கூட இல்லாத ஊரில் நெகிழ்ச்சி சம்பவம்!
மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகர் அருகே அமைந்துள்ளது இஸ்லாக் கிராமம். 2,000 பேர் வசிக்கும் இந்தக் கிராமத்தில் கடைசியாக எடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் படி இங்கு ஒரு முஸ்லிம் கூட இல்லை.
நடுத்தர மற்றும் சிறு விவசாயிகள் அதிகம் வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த ஜனவரி 26-ம் தேதி இஸ்லாக் கிராமத்தில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கட்தொகை பதிவேட்டுக்கு எதிராக கிராம மக்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
அதுமட்டுமின்றி நாட்டிலேயே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல் கிராமம் எனும் பெருமையையும் பெற்றுள்ளது இஸ்லாக் கிராமம்.
இதுகுறித்த ஆவணத்தில் ஊராட்சித் தலைவர், ஊராட்சித் துணைத்தலைவர் ஆகியோர் கையொப்பமிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஊராட்சித் தலைவர் பாபாசாகேப் கோராங்கே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கு நிலம் ஏதும் இல்லை. அதேசமயம் அவர்களின் அடையாளம் என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஆவணங்களும் கிடையாது.
ஆனால் தலைமுறை தலைமுறையாக இங்கு வசித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இந்த நிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் என்று நிரூபிக்க எந்தவித அடையாளமும் இல்லை. அதற்காக அவர்களை நாங்கள் தூக்கி எறிந்துவிட முடியுமா?
எங்கள் கிராமத்தில் முஸ்லிம்கள் ஒருவர் கூட இல்லை; இருப்பினும் மனிதநேயத்தின் அடிப்படையிலேயே இப்படியொரு தீர்மானத்தை நிறைவேற்றிஇருக்கிறோம்” எனத் தெர்வித்துள்ளார். இந்த கிராமத்தைத் தொடர்ந்து அருகில் உள்ள கிராமங்களும் வரும் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!