India
“பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சமூகநீதிக்கு பாதிப்பு”- ஆ.ராசா பேச்சால் கொந்தளித்த பா.ஜ.க எம்.பிக்கள்!
எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்காமல், காலிப் பணியிடங்களை நிரப்பும் உத்தரகாண்ட் அரசின் உத்தரவு குறித்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்கவேண்டிய கட்டாயம் இல்லை என்று தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இட ஒதுக்கீட்டுக் கொள்கையையும் சமூக நீதியையும் கொன்று புதைக்கும் செயல் என தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரம் சூடுபிடித்துள்ளது. மக்களவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க எம்.பி., ஆ.ராசா இடஒதுக்கீடு விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார்.
அப்போது பேசிய அவர், “பா.ஜ.க அரசு ஆட்சிப்பொறுப்பேற்றதில் இருந்தே, சமூக நீதிக்கும், இட ஒதுக்கீடு கொள்கைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். ஆ.ராசாவின் பேச்சுக்கு பா.ஜ.க எம்.பிக்களும், அமைச்சர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
பா.ஜ.க உறுப்பினர்களின் கூச்சலைத் தொடர்ந்து பேசிய ஆ.ராசா, “உங்கள் அரசாங்கம் என்று நான் மத்திய அரசைச் சொல்லவில்லை. உத்தரகாண்டில் ஆளும் பா.ஜ.க அரசைக் குறிப்பிடுகிறேன். உச்சநீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு ஒன்றில், ‘எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையும் கிடையாது, சட்ட சாசன உரிமையும் கிடையாது' என்ற வாதத்தை வைத்துள்ளது உத்தரகாண்ட் அரசு. இது இட ஒதுக்கீடுக்கு எதிரான நடவடிக்கை இல்லையா?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், “இதற்கு முன்பே உச்சநீதிமன்றத்தில் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது என்பது பிறப்புரிமை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உத்தரகாண்ட் பா.ஜ.க அரசின் வாதம் அமைந்துள்ளது.
இந்த நிலையைப் போக்க புதிய சட்ட நடைமுறையை அமல் செய்து பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர்களின் உரிமையை மீட்கவேண்டும்” எனப் பேசினார் தி.மு.க எம்.பி ஆ.ராசா.
Also Read
-
பழைய நிலங்களின் வீட்டுப் பட்டா குறித்து வந்த குட் நியூஸ்... அரசின் முக்கிய அறிவிப்பு - முழு விவரம் உள்ளே!
-
உங்கள் எதிர்காலத்திற்கு நாங்கள் கேரன்டி! 300 வீரர்களுக்கு அரசு வேலை வழங்கி சாதனை:துணை முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 'தமிழரசு' மின் இதழ்... Web Application மற்றும் Mobile Application.. அசத்தல் திட்டம்!
-
ரூ.78.41 கோடி... 13 மாவட்டங்களில் 26 முடிவுற்ற திட்டப்பணிகள்... திறந்து வைத்த முதலமைச்சர் !
-
சுப்பிரமணியபுரத்தில் ரூ.62.68 கோடி 396 அடுக்குமாடி குடியிருப்புகள்... திறந்து வைத்தார் முதலமைச்சர்!