India
கொரோனா எதிரொலி : சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டினருக்கு அனுமதியில்லை - மத்திய அரசு அறிவிப்பு!
சீனாவில் 'கொரோனா' வைரஸ் வெகுவேகமாகப் பரவி வருவதால் இதுவரை 810 பேர் பலியாகியுள்ளனர் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதனால், சீனாவின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா எனப்படும் கொடூரமான வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. சீனாவில் தொடங்கி, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரித்த லீ வெண்லியாங் என்ற மருத்துவரும் கொரோனா வைரஸ் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் சீனாவில் நேற்று முன் தினம் வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பல உலக நாடுகள் சீனாவில் இருந்து வரும் மக்களுக்குத் தடை வித்தித்தும் போக்குவரத்து சேவையை நிறுத்தியும் வருகின்றன. அந்த வகையில் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கு இ-விசாவை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்திய அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் வர அனுமதி இல்லை என விமான போக்குவரத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விமான போக்குவரத்துறை இயக்குநர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், விமானம் மற்றும் கப்பல் மூலம் சீனாவிலிருந்து வருபவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர் எல்லைகள் வழியாகவும் இந்தியாவுக்குள் வர அனுமதியில்லை. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவிலிருந்து இந்தியா வரும் வெளிநாட்டினருக்கு அனுமதியில்லை என தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!