India
ஐந்தாவது மாநிலமாக CAAவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது ம.பி. - பா.ஜ.க அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பா.ஜ.க அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகளும் தொடுக்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு முதன்முதலாக தனது சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. அரசியல் சாசனத்துக்கு எதிரானது எனக் கூறி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.
கேரளாவைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டசபையிலும், ராஜஸ்தான் சட்டசபையிலும், மேற்குவங்க மாநில சட்டப்பேரவையிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், ஐந்தாவது மாநிலமாக, கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆளும் மத்திய பிரதேச மாநில சட்டசபையில் இன்று குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீர்மானத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இச்சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டங்களை மீறியதாகும். இச்சட்டம் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்களை ஏற்படுத்தி உள்ளது. NPR எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிலும் திருத்தம் கொண்டு வரவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அச்சட்டத்துக்கு எதிராக 5 மாநிலங்கள் இதுவரை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது பா.ஜ.க அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!