India
இந்தியாவுக்கு வந்தது கொடிய கொரோனா வைரஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு - தீவிர கண்காணிப்பில் 10 பேர்!
சீனாவை உலுக்கி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஜப்பான், நேபாளம், மலேசியா, ஹாங்காங், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதனால் சீனாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரையும் உலக நாடுகள் தீவிரமாகக் கண்காணித்து, தீவிரப் பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கின்றன.
இந்தியாவிலும் விமான நிலையங்களில் தீவிரமான கண்காணிப்பும், மருத்துவ சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் இருந்து சமீபத்தில் கேரளா திரும்பிய இளைஞருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்தள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சமீபத்தில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து திரும்பியுள்ளார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி, கண்காணிப்பில் வைத்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. அவர் மருத்துவமனையில் தனி அறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், இந்தியாவிலும் கொரோனா எனும் கொடிய வைரஸ் நுழைந்துள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சீனாவில் இருந்து இதுவரை 806 பேர் கேரளா திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளதாகவும் அவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறியுடன் கூடிய 10 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலால் இந்தியர்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அரசு மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் எனப் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Also Read
-
வரலாறு படைத்த மெஸ்ஸி... உலகில் யாரும் செய்யாத சாதனையை செய்து அசத்தல்... விவரம் உள்ளே !
-
“விடுபட்ட மகளிருக்கு நிச்சயமாக வருகிற டிச.15 முதல் உரிமைத் தொகை வழங்கப்படும்!” : துணை முதலமைச்சர் உறுதி!
-
நேருக்கு நேர் மோதிக் கொண்ட பேருந்துகள் : 6 பேர் உயிரிழப்பு - தென்காசியில் நடந்த சோகம்!
-
“இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக்கூடாது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மோடி அரசு: திருவாரூரில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஆர்ப்பாட்டம்!