India
தொடர் வீழ்ச்சியில் 8 முக்கிய உற்பத்தி துறைகள் : பொருளாதாரத்தை சீரமைக்க என்ன செய்யப்போகிறது மோடி அரசு?
மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்ததில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மந்த நிலையைச் சந்தித்து வருகிறது. இருந்தாலும், அமைச்சரவை சகாக்கள் அதனை ஒப்புக்கொள்ளாமல் பொது வெளியில் எவ்வித மந்தநிலையும் இல்லை என கூறி வருகிறது.
ஆனால், அவ்வப்போது மந்தநிலை தொடர்பான அறிவிக்கைகளை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. அவ்வகையில், மின் உற்பத்தி, உருக்கு, நிலக்கரி, சிமெண்ட், உரங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், கச்சா எண்ணெய் , இயற்கை எரிவாயு ஆகிய 8 முக்கிய துறைகளின் உற்பத்தி தொடர்ந்து 4வது மாதமாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது என மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 5.2 சதவிகிதமாக இருந்த இத்துறைகளின் வளர்ச்சி விகிதம், நவம்பர் மாதத்தில் இது 1.5 சதவிகிதமாகச் சுருங்கியுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முக்கியமான 8 துறைகளில் 5 துறைகள் எதிர்மறையான வளர்ச்சியை அடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் உட்கட்டமைப்புத் துறைகளில் 102 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. அதேபோல, உலக வங்கி மற்றும் சர்வதேச செலவாணி நிதியமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து எதிர்மறையான அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
காசா, லெபனான், ஈரானைத் தொடர்ந்து சிரியா : ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேல்... காரணம் என்ன ?
-
திருவள்ளுவர் சொல்லாத குறளை சொன்ன விவகாரம்... ஆளுநர் ரவி செய்தது திட்டமிடப்பட்ட சதி : செல்வப்பெருந்தகை !
-
1 மணி நேரம் வராத புறநகர் மின்சார ரயில்... ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் : சென்னையில் நடந்தது என்ன ?
-
மயிலாடுதுறை மக்களே.. உங்களுக்காக 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“பத்து தோல்வி பழனிசாமிக்கு வரும் தேர்தல் நிறைவான Goodbye!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!