India
பாலியல் புகார் கொடுத்த பெண் மீது துப்பாக்கிச்சூடு : பீகாரில் மீண்டும் ஒரு உன்னாவ் கொடுமை !
பீகார் மாநிலம் ரோஹ்டாஸ் மாவட்டத்தில் ராஜ்பூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தலித் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக ஜாபர் கான், ஃபரூக் கான், ஷர்பூக் கான் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலிஸிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்தப் புகாரை அடுத்து பாலியல் தொல்லை கொடுத்த நால்வரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், நேற்று (டிச.,17) புகாரளித்த பெண்ணின் வீட்டிற்கு பத்திரிகையாளர்கள் எனக் கூறிக்கொண்டு வந்த நால்வர் பேட்டியெடுப்பது போல் நடித்து துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை சுட்டு தப்பித்துள்ளனர்.
இதனையடுத்து அந்த பெண்ணை மீட்ட அவரது குடும்பத்தார் ஜமாஹர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதற்கிடையில் தப்பியோடியவர்கள் பாலியல் வழக்கில் கைதாகியுள்ளவர்களின் கூட்டாளிகள் என தெரிகிறது. துப்பாக்கிச் சூடு நடந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற ராஜ்பூர் போலிஸார், தப்பியோடிய நால்வரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
துப்பாக்கியால் சுடப்பட்டு அனுமதிக்கப்பட்ட பெண்ணின் நிலைமை தற்போது சீராகியுள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், புகார் தெரிவித்த பெண்ணை வீடு தேடிவந்து துப்பாக்கியால் சுட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?