India

“குடியுரிமை சட்டத்திற்கு இஸ்லாமியர் ஆதரவா?” : முஸ்லிம் பெயரில் இந்துத்வா கும்பலின் பொய் பிரசாரம் அம்பலம்!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், தி.மு.க, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனிடையே, அசாம், திரிபுரா மாநிலங்களில் மக்கள், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை அடுத்து, அதைத் திரும்பப் பெற வலியுறுத்தி அசாம், திரிபுராவில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இதனிடையே, சமூக ஊடங்களிலும் மத்திய அரசுக்கு எதிராக ட்விட்டர் ஹேஷ்டாக், வீடியோ என வரைலாக பரவி வருகிறது. ஆனால் பெரும்பாலன மக்கள் இந்த சட்டத்தை எதிர்க்கும் நிலையில், சமூக வலைதளங்களில் முஸ்லிம் பெயர்களை கொண்ட ஒரு சிலர் இந்த சட்டத்தை ஆதரிப்பதாக கருத்து தெரிவித்து வந்தது பெரும் வியப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.

இந்நிலையில் ட்விட்டரில் முஸ்லிம் பெயரில் ஒருவர் “நான் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவன். இந்த சட்டத்தை நான் ஆதரிக்கிறேன். இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு கடும் கண்டம் தெரிவித்துக்கொள்கிறோன்” என பதிவிட்டிருந்தார்.

அவரைப் போன்றே மற்றும் சில முஸ்லிம் பெயர் கொண்ட ஐ.டிக்கள் இதே கருத்தை பதிவு செய்து வந்தனர்.இதனிடையே, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்து கருத்து தெரிவிந்த அந்த ட்விட்டர் கணக்கை ஆங்கில ஊடகம் ஒன்று ஆய்வு செய்தது.

அதில், அந்த ட்விட்டர் கணக்கில் பயன்பாட்டாளர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்றும், பா.ஜ.க மற்றும் இத்துத்வா கும்பலின் ஆதரவாளர் என்றும் தெரியவந்தது.

Also Read: “அடிப்படையே பாரபட்சமாக உள்ளது” : குடியுரிமை சட்டத்திற்கு ஐ.நாவின் மனித உரிமை ஆணையம் கண்டனம்!

பா.ஜ.கவுக்கு ஆதரவாக பொய் பரப்புரை செய்வதற்காக அவர்கள் தங்கள் ட்விட்டர் ஐ.டிக்களில் முஸ்லிம்களாக காட்டிக் கொண்டதும் தெரிய வந்திருக்கிறது. முஸ்லிமாக இருந்து குடியுரிமை சட்டத்தை ஆதரிப்பதனால், ’இச்சட்டத்துக்கு அனைத்து முஸ்லிம்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை’ என்ற பின்பத்தை உருவாக்குவதே இவர்களின் நோக்கம்.

இதனையடுத்து அந்த முஸ்லிம் பெயரில் இருந்து ட்விட்டர் கணக்கில் இயங்கி வந்தவர்களின் முந்தைய இந்துத்வா ஆதரவு பதிவுகளை அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இவர்கள் ஒரே இரவில் தங்களின் அடையாளங்களை மறைத்து இதுபோல மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

அவர்களின் கணக்குகளை ட்விட்டர் நிர்வாகம் முடக்கவேண்டும் என ட்விட்டர் பயன்பாட்டாளர்கள் பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.