India
”நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதிக்க வேண்டும்”: துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை கோரிக்கை!
டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி (நிர்பயா) கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நிர்பயா பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு உறுதி செய்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன், சீர்திருத்த பள்ளியில் 3 ஆண்டு தண்டனை முடித்ததால் விடுவிக்கப்பட்டான். மேலும், ராம் சிங் என்கிற குற்றவாளி டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான்.மற்ற குற்றவாளிகளின் மறுபரிசீலனை மனுக்களையும் உச்ச நீதிமன்றம் கடந்த 17ம் தேதி நிராகரித்தது.
அவர்கள் நான்கு பேரையும் உடனடியாக தூக்கிலிட வேண்டும் என நிர்பயாவின் பெற்றோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை வருகின்ற 18ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் தூக்கிலிடும் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை மேற்கொள்ள தன்னை அனுமதிக்கக் கோரி, சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலுடும் பணியை நான் மேற்கொள்ள வேண்டும். பெண் ஒருவர், மரண தண்டனையை நிகழ்த்த முடியும் என்ற செய்தி நாடு முழுவதும் சென்று சேரும். எனக்கு பெண் நடிகைகள், எம்.பி.,க்கள் ஆதரவளிக்க வேண்டும். இது சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டுவரும் என நான் நம்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
Reels மோகம் : தண்டவாளத்தில் 2 நண்பர்களுக்கு நேர்ந்த துயர சம்பவம்!
-
2026-ல் “திராவிட மாடல் 2.0 தொடங்கியது!” என்பதுதான் தலைப்புச்செய்தி! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!
-
சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேக்கம் இல்லை! : சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன?
-
விஜய் அனுப்பிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்!