India
உத்தரப்பிரதேசத்தில் தொடரும் அவலம் - 18 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தீவைப்பு!
இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான் பாலியல் வன்முறை தொடர்ந்துவருகிறது. முக்கியமாக உத்தரப் பிரேதச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுகிறது.
அண்மையில், உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நீதிமன்றம் சென்ற இளம்பெண்ணை ஒரு கும்பல் தீ வைத்து கொளுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம் பதேபூர் பகுதியில் மற்றொரு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பதேபூர் மாவட்டம் உனிப்பூர் கிராமத்தில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அப்பெண்ணின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணை மீட்டு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், இளம்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். 90 சதவிகித தீக்காயங்களுடன் அந்தப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம் என்றார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடரும் இதுபோன்ற பாலியல் வண்கொடுமை சம்பவங்கள் மக்களிடையே மாநில அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!