India
“டெல்டா பகுதியில் 15 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு ஒப்புதல்” - வைகோ கேள்விக்கு அமைச்சர் பதில்!
மாநிலங்களவையில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்.
காவிரி வடிநிலப் படுகையில், ஓஎன்ஜிசி நிறுவனம் எத்தனை ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்து இருக்கிறது? அதற்காக, மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது?
அந்தக் கிணறுகளைத் தோண்டுவதற்கு, சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? அவ்வாறு தோண்டுகின்ற இடம், விளைநிலங்களா? அவ்வாறு இருந்தால், அதுகுறித்து அரசின் நிலைப்பாடு என்ன?
ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவது குறித்து மறு ஆய்வு செய்யப்படுமா? திட்டம் கைவிடப்படுமா? என்பது குறித்த கேள்விகளை எழுப்பினார் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ.
அதற்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள விளக்கத்தில், “காவிரி வடிநிலப் படுகையில், ஓஎன்ஜிசி நிறுவனம், 37 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்துள்ளது. மொத்த நிலப்பரப்பு 0.83 சதுர கிலோ மீட்டர். 15 இடங்களுக்கு, சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
15 கிணறுகள், விளைநிலங்களின் மீது தோண்டப்படுகின்றன. அதை எதிர்த்தும், சுற்றுப்புறச் சூழல் கேடுகள் குறித்தும், அப்பகுதி மக்களும், பல அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளனர்.
அந்தப் பிரச்னைகள் குறித்து, அதற்கு உரிய அதிகாரிகளிடம் கருத்துக் கேட்கப்படும்; சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்குமுறைகள், வழிகாட்டுதல்களின்படி தீர்வு காணப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!