India

“உண்மையான குற்றவாளிகளை தமிழக அரசே காப்பாற்ற நினைக்கிறதா?” - சிலை கடத்தல் வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி!

சிலை கடத்தல் வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை தமிழக அரசே தண்டிக்க விரும்பவில்லை என்றால் என்ன செய்வது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பதவி நீட்டிப்பு குறித்து பொன்.மாணிக்கவேல் பதிலளிக்கவும், சிலை கடத்தல் வழக்கு தொடர்புடைய ஆவணங்களை உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதே நேரத்தில் பதவி நீட்டிப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இதனிடையே தமிழக அரசை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கு விசாரணையின்போது, சிலைக் கடத்தல் வழக்குகளில் அமைச்சர்களின் தொடர்பு இருப்பதால் விசாரணையை தமிழக அரசு முடக்க முயற்சிப்பதாக டிராபிக் ராமசாமி தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

அப்போது, “உண்மையான குற்றவாளிகளை தமிழ்நாடு அரசு தண்டிக்க விரும்பவில்லை என்றால் என்ன செய்வது” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி, அதுதொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் எனத் தெரிவித்தனர்.

Also Read: “சிலை கடத்தல் வழக்கில் அரசு மோசமாக நடந்துகொள்வது ஏன்?” : நீதிபதிகள் கேள்வி!