India
“அராஜக அரசியலுக்கான விலையை கொடுத்திருக்கிறது பா.ஜ.க” : இடைத்தேர்தலில் அமோக வெற்றிபெற்ற திரிணாமுல் காங்!
மேற்கு வங்க மாநிலத்தில் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளன.
இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் கரீம்பூர், கரக்பூர் சாதர் எம்.எல்.ஏக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதால் அந்தத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன. கலியாகஞ்ச் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ மறைந்ததால் அந்தத் தொகுதி இடைதேர்தலை சந்தித்தது.
இடைத்தேர்தல்ல் நடைபெற்ற மேற்கு வங்கத்தின் காரக்பூர் சாதர், கரீம்பூர், கலியாகஞ்ச் ஆகிய 3 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன.
3 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. காரக்பூர் சாதர் தொகுதியில் முதன்முறையாக வென்று அசத்தியுள்ளது திரிணாமுல் காங்கிரஸ். இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, “பா.ஜ.கவின் அராஜக அரசியலுக்கான விலையை பா.ஜ.க கொடுத்திருக்கிறது. இந்த மண்ணின் மக்களை அவமரியாதை செய்ததன் பலனை பா.ஜ.க அனுபவிக்கிறது. இந்த வெற்றியானது மேற்கு வங்க மக்களின் வெற்றியாகும். பா.ஜ.கவின் அணுகுமுறை நீடித்தால் இதே பாடத்தை இனியும் கற்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“பொதுத்துறையில் ஒன்றிய அரசின் பங்குகள் குறைவது ஏன்?” : திமுக எம்.பி.க்கள் முன்வைத்த கேள்விகள் உள்ளே!
-
“தூத்துக்குடிக்கான ‘கடற்பாசி பூங்கா’க்களின் நிலை என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
ஒரே நாளில் 8,46,250 நபர்களுக்கு உணவு வழங்கிய சென்னை மாநகராட்சி! : முழு விவரம் உள்ளே!
-
‘சஞ்சார் சாத்தி’ செயலியை பதிவிறக்க கட்டாயம் இல்லை! : எதிர்ப்புகளை அடுத்து பின்வாங்கிய ஒன்றிய பா.ஜ.க அரசு!
-
தண்டையார்பேட்டையில் தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர்கள் குடியிருப்பு திறப்பு! : முழு விவரம் உள்ளே!