இந்தியா

மேற்குவங்கம்: சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமான இடைத்தேர்தல்?- மல்லுக்கட்டும் பா.ஜ.க - திரிணாமுல் காங்!

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்களே உள்ள நிலையில் பா.ஜ.க-விற்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மேற்குவங்கம்: சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமான இடைத்தேர்தல்?- மல்லுக்கட்டும் பா.ஜ.க - திரிணாமுல் காங்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு வங்க மாநிலத்தில் 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பா.ஜ.க இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் தொடங்கி இடைத்தேர்தல் வரை அனைத்து தேர்தல்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது பா.ஜ.க. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் மூன்று தொகுதிகளின் இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் 2011ம் ஆண்டு முதல் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. 45 ஆண்டுகள் ஆட்சியிருந்த கம்யூனிஸ்டுகளை வீழ்த்தி ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார் மம்தா பானர்ஜி. 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் வெறும் 2 இடங்கள் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பா.ஜ.க 2019 தேர்தலில் 18 இடங்கள் வெற்றி பெற்று மம்தாவிற்கு ஆதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இந்த நிலையில் 2021ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கட்சிகள் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளன.

மேற்குவங்கம்: சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமான இடைத்தேர்தல்?- மல்லுக்கட்டும் பா.ஜ.க - திரிணாமுல் காங்!

இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் கரக்பூர் சாதர் திரிணாமுல் காங்கிரஸுக்கும், கரிம்பூர் பா.ஜ.கவிற்கும், கலியாகஞ்ச் காங்கிரஸுக்கும் சாதகமான தொகுதிகள் ஆகும். கரிம்பூர், கரக்பூர் சாதர் எம்.‌எல்‌.ஏக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டதால் அந்தத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. கலியாகஞ்ச் தொகுதியின் காங்கிரஸ் எம்‌.எல்.‌ஏ மறைந்ததால் அந்தத் தொகுதி இடைதேர்தலை சந்திக்கிறது.

கரக்பூர் சாதர் மேற்கு மிட்னாபூர் நாடாளுமன்றத் தொகுயிலும், கலியாகஞ்ஜ் வடக்கு டிஞ்சாபூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் வருகிறது. இரண்டு தொகுதியிலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வெற்றி பெற்று இருக்கிறது. கரிம்பூர் முர்ஷிதாபாத் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. அதில் திரிணாமுல் 42 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேற்குவங்கம்: சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமான இடைத்தேர்தல்?- மல்லுக்கட்டும் பா.ஜ.க - திரிணாமுல் காங்!

இந்த இடைத்தேர்தலுக்கு முன்னதாக ஆகஸ்ட் மாதம் "Tell DD" என்ற பிரச்சாரம் தொடங்கப்பட்டது. இதுவரை 10 லட்சம் அழைப்புகள் வரை வந்திருக்கிறது. 1000 கட்சி தலைவர்கள் மூலம் 10 ஆயிரம் கிராமங்களில் உள்ள பிரச்னைகளை கண்டறிந்து தீர்வு காண உத்தரவிட்டு இருக்கிறார் மம்தா. தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம் முக்கிய விவகாரமாக பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா அறிவித்ததுக்கு மம்தா பானர்ஜி கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

கரிம்பூர், கலியாகஞ்ச் இஸ்லாமியர்கள் மற்றும் தலித் மக்கள் அதிகம் வாழும் பகுதி.1971ம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போரின் போது மேற்கு வங்கம் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு இடங்களும் திரிணாமுல் காங்கிரஸுக்கு சாதகமாகவும், கரக்பூர் தொகுதியில் வங்காளி அல்லாதோர் அதிகம் இருப்பதாலும் ராமர் கோவில் விவகாரத்தாலும் பா.ஜ.கவிற்கு சாதகமாக இருக்கிறது.

மேற்குவங்கம்: சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமான இடைத்தேர்தல்?- மல்லுக்கட்டும் பா.ஜ.க - திரிணாமுல் காங்!

இடைத்தேர்தல் முடிவுகள் 28ம் தேதி வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்களே உள்ள நிலையில் பா.ஜ.க-விற்கும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் இந்த இடைத்தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

- சி.ஜீவா பாரதி

banner

Related Stories

Related Stories