India
“எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு அடையாளம்” - உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவாருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின், மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள உத்தவ் தாக்கரேவையும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரையும், இன்று (27-11-2019) தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
உத்தவ் தாக்கரேவுக்கு வாழ்த்து :
உத்தவ் தாக்கரே அவர்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலக் கட்சியின் தலைவர் ஒருவர் முதலமைச்சராவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
எதிர்ப்பட்ட தடைகளை எல்லாம் உடைத்து வெற்றி பெற்றுள்ளீர்கள். தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.
சரத் பவாருக்கு வாழ்த்து :
“மகாராஷ்டிரத்தில் நிலையான ஆட்சியை அமைத்ததற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். எதிர்க்கட்சியினரின் ஒற்றுமைக்கு அடையாளமாக நீங்கள் திகழ்கிறீர்கள். ஜனநாயகம் துடிப்பாக இயங்கவும், அரசியலமைப்புச் சட்டமும் நாடும் வலிமையாக இருக்கவும் இந்த ஒற்றுமை தொடர வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“வணிகர்களின் தோழன் திராவிட மாடல் அரசு” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
‘நான் இந்தியன்’ : சீனர் என நினைத்து திரிபுரா இளைஞர் அடித்துக் கொலை - அதிர்ச்சி சம்பவம்!
-
ரூ.18.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள துணைமின் நிலையம்... திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கட்டடக் கலையைப் போற்றும் திராவிட மாடல் அரசு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கலை உள்ளம்!
-
“எடப்பாடி பழனிசாமியின் மாணவர் விரோத மனநிலை!” : வீரபாண்டியன் கண்டனம்!