India
முதலில் பால், இப்போது பாதுகாப்பற்ற, தரமற்ற உணவு விற்பனையிலும் தமிழகம் முதலிடம் - மத்திய அரசு அறிவிப்பு!
நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக நச்சுத்தன்மை கொண்ட பாக்கெட் பால் விற்கப்படுவதாக அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரியவந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீளாமல் இருக்கும் நிலையில், பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற உணவுகள் தமிழகத்தில் தான் அதிகமாக விற்கப்படுவதாக உணவு தர கட்டுப்பாட்டு நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
2018-19ம் ஆண்டின் உணவு தரம் குறித்து மத்திய அரசின் FSSAI (food safety and standards autority if india) நிறுவனன் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதற்காக நாடு முழுவதிலும் இருந்து எடுக்கப்பட்ட 1 லட்சத்து 6 ஆயிரத்து 459 உணவுப் பொருட்களை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில், பாதுகாப்பற்ற, சுகாதாரமற்ற மாநிலங்களின் பட்டியலில் 12.7% பெற்று தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதனையடுத்து அஸ்ஸாம் மாநிலம் 8.9 சதவிகிதமும், ஜார்கண்ட் 8.8%, மேற்கு வங்கம், ஒடிசா 7.6% என்ற முறையே பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
அதேபோல், தரமற்ற உணவு கிடைப்பதிலும் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. மேலும், உணவு பொருட்களின் தயாரிப்பு மற்றும் காலாவதி தொடர்பாக ஒட்டப்படும் லேபிள் விவகாரத்திலும் தமிழகம் மோசமாக இருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
Also Read
-
மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க-விற்கு ஒரு MP சீட் ஒதுக்கீடு!
-
மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் “திறனகம்” : 5 முக்கிய அம்சங்கள் என்ன?
-
ஒன்றிய - மாநில உறவு : தமிழ்நாட்டின் குரலுக்கு ஆதரவு தந்த CM சித்தராமையா - நன்றி சொன்ன CM MK Stalin!
-
தென் இந்தியாவிலேயே முதன் முறை... சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்!
-
இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!