India
பள்ளிகளில் செமஸ்டர் தேர்வு முறை: கல்வியை வியாபாரமாக்குகிறதா பா.ஜ.க அரசு?
புதியக் கல்விக்கொள்கையின் அடிப்படையில் பள்ளிகளில் 9 முதம் 12ம் வகுப்பு வரையில் செமஸ்டர் தேர்வு முறை கொண்டு வருவது குறித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கஸ்தூரி ரங்கன் குழு அளித்த பரிந்துரையின் படி, புதியக் கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையை அண்மையில் மத்திய பா.ஜ.க அரசு அறிவித்தது. இதில், ஏழை எளிய மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையிலான திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
இதற்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால், மக்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டு புதிய கல்விக்கொள்கையில் மாற்றம் செய்து நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், புதியக் கல்விக்கொள்கையை அறிமுகப்படுத்தும் தீர்மானங்களை கொண்டுவர மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை திட்டமிட்டுள்ளது.
இதில், 3, 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை, 9 முதல் 12ம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறை குறித்த முடிவுகள் கண்டிப்பாக இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசு பள்ளியில் பயின்றுவரும் ஏழை எளிய மாணவர்கள் பள்ளிக்கல்வியை தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும், பள்ளிகளில் செமஸ்டர் தேர்வு முறை கொண்டுவருவது கல்வியை வியாபாரமாக்குவதற்கான திட்டமாக கருதுவதாக கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
வேலியே பயிரை மேய்வதா? : விசாரணை என்ற பெயரில் இளம் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட காவல் உதவி ஆய்வாளர்!
-
மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த த.வெ.க நிர்வாகி : தமிழ்நாடு முழுவதும் தொடரும் அராஜகம்!
-
“ஆதவ் அர்ஜுனா அரசியலில் ஒரு கள்ள நாணயம்” : ஆர்.எஸ்.பாரதி சாடல்!
-
“அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள கொள்கைத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்!” : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு : த.வெ.க அரசு கொண்டு வந்த மாற்றம் இதுதான்!