India
‘நித்யானந்தாவின் ஆஸ்தான சிஷ்யைகள் எங்கே?’ - பரிதவிக்கும் பெற்றோர்: ஆசிரமத்தில் நடக்கும் மர்மம் என்ன?
பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தனா சர்மா . இவர் நித்யானந்தாவிடம் தனி செயலாளராக உள்ளார். இவர் பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் தனது 3 மகள்களையும் ஒரு மகனையும் அவர் சேர்த்துள்ளார்.
இந்நிலையில் நவம்பர் 2ம் தேதி, குஜராத் அஹமதாபாத் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தனது குழந்தைகளை சந்திக்கச் சென்ற அவருக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜனார்த்தனா சர்மா குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவினை தாக்கல் செய்துள்ளார். அதில், "கடந்த 2013ல் பெங்களூரிலுள்ள நித்தியானந்தாவுக்குச் சொந்தமான கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய மகள்களைச் சேர்த்தோம். ஆனால், அவர்கள் பெங்களூரிலிருந்து அகமதாபாத் கிளைக்கு மாற்றப்பட்டு விட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது அதனால் அகமதாபாத் சென்றோம்.
ஆனால் அங்குள்ள ஆசிரம ஊழியர்கள் எங்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதன் பிறகு போலீசுடன் சென்று ஒரு மகளை மீட்டோம். ஆனால் மூத்த மகள்கள் லோகமுத்ரா, மற்றும் நந்திதா, இரண்டு பேருமே வரமறுத்துவிட்டார்கள். அதனால் அவர்களை மீட்டுத்தருமாறு அந்த தம்பதி மனுவில் கூறியுள்ளார்.
தன் குழந்தைகளை கடத்தி சென்று அடைத்து வைத்துள்ளதாக அகமதாபாத் விவேகானந்தா நகர் ஸ்டேஷனிலும் ஜனார்த்தன ஷர்மா புகார் மனு அளித்தார். இதையடுத்து நித்யானந்தா உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக அகமதாபாத் புறநகர் காவல் கண்காணிப்பாளர் ஆர்.வி. ஆச்சாரி கூறியுள்ளார்.
சிறுமிகள் கடத்தப்பட்ட புகாரில் நித்தியானந்தா ஆசிரம நிர்வாகிகள் 2 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர். ஆசிரமத்தில் தலைமை நிர்வாகியான பிரியாதத்வா, பிரான்ப்ரியா ஆகிய இரண்டு நிர்வாகிகளை அகமதாபாத் போலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் ஜனார்த்தனா ஷர்மாவின் மூத்தமகள் மா நித்தியானந்தா என்ற பெயரில் பேஸ்புக்கில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், என்னை யாரும் கடத்தவில்லை. நான் பத்திரமாக உள்ளேன். என் விருப்பப்படியேதான் இருக்கிறேன் எங்கு வேண்டுமானாலும் சென்று வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.
ஆனால், அவர் எங்கிருக்கிறார் என்ற தகவல் தெரியவில்லை. இதனால், நித்யானந்தா ஆசிரமத்தில் என்ன நடக்கிறது? நித்யானந்தாவின் ஆஸ்தான சிஷ்யை எங்கே போனார்? என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Also Read
-
குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் கைவிட்டது ஏன்? : பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி!
-
திமுக ஆட்சி தொடர்ந்தால் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைந்திருப்போம் - ஆஸ்டின் பதிலடி!
-
”இந்த திட்டத்தில் கை வைத்தால் த.வெ.க அரசின் கதை முடிந்தது” - CPM செயலாளர் பெ.சண்முகம் எச்சரிக்கை!
-
பொய்யிலே பிறந்து... பொய்யிலே புரண்டு... : விஜயின் பொய்களை வெளிச்சம் போட்டு காட்டும் முரசொலி!
-
“தந்தை பெரியார், அம்பேத்கர் பெயர் நீக்கம் என்பது ஒரு திட்டமிட்டச் செயல்!”: மு.வீரபாண்டியன் கடும் கண்டனம்!