India

தொடரும் பொருளாதார மந்தநிலை : தொழில்துறை வளர்ச்சியில் 4.3% சரிவு - அம்பலப்படுத்திய NCAER ஆய்வறிக்கை!

பொருளாதார மந்தநிலை காரணமாக தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி தொடர்ந்து 2வது மாதமாக வீழ்ச்சி அடைந்து வருவதாக National Council Of Applied Economic Research என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

NCAER வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 4.3 சதவிகிதம் பின்னடைவைச் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் பொருளாதார மந்தநிலை நீடிப்பதால் தொடர்ந்து 2வது மாதமாக சரிவைச் சந்தித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய புள்ளியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலீட்டு தேவையை குறிக்கும் மூலதன பொருட்களின் வளர்ச்சி, 20.7% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் நுகர்வோர் சாராத சாதனங்கள் துறை ஆகியவற்றின் வளர்ச்சியிலும் சரிவு ஏற்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இருக்கையில் பா.ஜ.க அரசோ இன்றளவும், நாட்டில் எந்த பொருளாதார மந்தநிலையும் நிகழவே இல்லை என சமாளித்துக்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.