India

“இணையத் தொலைக்காட்சியில் ‘குறும்பு நிகழ்ச்சி’க்காக பேய் வேடமிட்ட மாணவர்களுக்கு நேர்ந்த கதி”

பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சிலர் கூக்ளி பீடியா என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவருகின்றனர். இவர்களின் யூடியூப் சேனலில் பிராங்க் ஷோ எனப்படும் குறும்பு நிகழ்ச்சி செய்வது என முடிவு செய்தனர். அதற்காக வெளிநாடுகளில் செய்யப்படும் யூடியூப் வீடியோக்களை பார்த்து தங்களை தயார் படுத்திக்கொண்டுள்ளனர்.

அப்படி சமீபத்தில், பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே ஷெரீப் பகுதியில் குறும்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்ய திட்டமிட்டுள்ளனர். ரோட்டில் வருபவர்களை பேய்வடிவத்தில் மிரட்டி அவர்கள் மிரள்வதை படம்பிடித்து தங்கள் சேனலில் ஒளிபரப்ப தயாராயினர். அதற்காக ஒருவரை தயார்ப்படுத்தி, வெள்ளை உடை அணிவித்து அதில், ரத்தக்கறை இருப்பது போலவும் வடிவமைத்துள்ளனர்.

பின்னர் யாருக்கும் தேரியாத இடத்தில் கேமராவை ஒளித்துவைத்து வீடியோ எடுத்துள்ளனர். அந்த வழியாக வரும் மக்களிடம் திடீரென நின்று அவர்களை பயமுறுத்துவது, சில நேரங்களில் அச்சத்தில் ஓடுபவர்களை விரட்டுச்சென்று பயமுறுத்துத்தியும் சேட்டை செய்துள்ளனர்.

இதில் அச்சமடைந்த சிலர் பெங்களூரு நகர போலிஸாருக்கும் தகவல் கொடுத்தனர். சிலர் பேய் இருப்பதாக எண்ணி இரவு நேரங்களில் வெளியே வருவதையே தவித்துள்ளனர். இந்நிலையில் போலிஸார் இவர்களை பிடிக்கச்சென்ற போது அவர்கள் அங்கிருந்த தப்பி ஓடியுள்ளனர்.

ஓடியவர்களை விரட்டிப்பிடித்த போலிஸாரிடம், பிடிபட்டவர்கள் யூடியூப்-க்காக வீடியோ எடுக்கிறோம் என்று கூறி கதறியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலிஸார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 7 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.

அனுமதியில்லாமல் மாறுவேடம் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்திய குற்றத்திற்காக போலிஸார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், பெற்றோர்களுக்கு இதுதொடர்பாக தகவல் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளனர்.