India
“அயோத்தி தீர்ப்புக்கு மதிப்பளிப்போம்; இது அன்பை வெளிப்படுத்தவேண்டிய காலம்” - ராகுல் கருத்து!
அயோத்தி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும் எனவும் இது அன்பின் காலம் எனவும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பை வாசித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும். மத்திய அரசு உருவாக்கும் அறக்கட்டளை கோவில் கட்டும் பணிகளை மேற்கொள்ளவேண்டும். சன்னி வஃக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் மாற்று இடத்தை அரசு அளிக்கவேண்டும்.” என உத்தரவிட்டார்.
இந்தத் தீர்ப்பு குறித்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அயோத்தி தீர்ப்பு குறித்து, முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், “அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மதிக்கும்போது நாம் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தைப் பேண வேண்டும். இது நாம் அனைவரும் சகோதரத்துவம், நம்பிக்கை மற்றும் அன்பை வெளிப்படுத்தவேண்டிய காலம்” எனக் குறிப்பிட்டுள்ளார் ராகுல்.
அயோத்தி தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "அனைத்துக் கட்சிகளும், சமூகத்தினரும், மக்களும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளித்து, நூற்றாண்டுகளாக நாம் ஒற்றுமையுடன் வாழ்ந்துவரும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பரஸ்பர நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் காக்கவேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சேமிப்போம் சிறப்பாக வாழ்வோம் ” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக சிக்கன நாள் வாழ்த்து!
-
“குறுவைப்பருவத்தில் 1,45,634 விவசாயிகளுக்கு ரூ.2,709 கோடி வழங்கப்பட்டுள்ளது!” : அமைச்சர் சக்கரபாணி தகவல்!
-
பள்ளிக்கரணை சதுப்புநிலம் - கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
“சென்னையில் இதுவரை 5.38 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
பயிர்க்காப்பீட்டுத் திட்டம் : விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை விரைந்து வழங்க அமைச்சர் MRK உத்தரவு!