India
“மோடி ஆட்சியில் 20% வீழ்ச்சி; அடுத்த 6 மாதங்களுக்கு வாகன விற்பனை சரியும்” : மாருதி சுசூகி நிர்வாகி வேதனை!
பா.ஜ.க ஆட்சியில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவின் பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம், ஹரியானாவின் குருகிராம் மற்றும் மனேசரில் உள்ள தனது தொழிற்சாலைகளை வருகிற அக்டோபர் 7 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளுக்கு மூடுவதாக கடந்த மாதம் அறிவித்தது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4% சரிவைச் சந்தித்துள்ளதால் இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக மாருதி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
ஆனாலும் தற்போது வரை நிலைமை சரியாகாததால் பெரும் தேக்கநிலையை அடைந்துள்ளது மாருதி சுசுகி. கடந்த செப்டம்பர் காலாண்டுடன் முடிவடைந்த முதல் பாதியில், மாருதி சுசூகியின் ஒட்டுமொத்த விற்பனை 25 சதவிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் அக்டோபர் மாத விற்பனையில் 4.5 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது.
குறிப்பாக மாருதி சுசூகி கடந்த சில மாதங்களாகவே 1 லட்சத்திற்கும் குறைவான வாகனங்களை தான் விற்பனை செய்துவருவதாகவும் இதனால் நிறுவனத்தில் பங்குகள் 50 சதவித அளவிற்கு விழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், மாருதி தனது விற்பனை இலக்கை குறைத்துக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து மாருதி சுசூகியில் இந்தியாவின் தலைமை அதிகாரி ஆர்.சி.பார்கவா அங்கில நாளிதழக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசிய பார்கவா, “மாருதி சுசூகியின் விற்பனையில் வீழ்ச்சி அடைந்துள்ளது உண்மைதான். எல்லா நிறுவனங்களுக்கும் இதே நிலைமைதான். கடந்த மாதம் பண்டிகை என்பதனால் ஓரளவு விற்பனையாகியுள்ளது.
மேலும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கும் பி.எஸ் - 6 விதிகளினால் அடுத்து வரும் 5 - 6 மாதங்களுக்கு வளர்ச்சி மிகக் கடுமையாகத்தான் இருக்கும். மேலும் இந்தியாவின் பொருளாதார நிலைமையால் பெரிய மாற்றம் இருக்கும் என நினைத்தேன்.
ஆனால், 20 சதவிகித அளவிற்கு விழ்ச்சி அடையும் என நான் நம்பவில்லை. குறிப்பாக சிறு கார்களின் விற்பனை 53 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. நிலவி வரும் மந்த நிலையால் மாருதி சுசூகி நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துவருகின்றது.” என்று பார்கவா கூறியுள்ளார்.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!