India
மகாராஷ்டிராவில் நீடிக்கும் இழுபறி: கூட்டணி கட்சியிடமே குதிரை பேரத்தில் ஈடுபடும் பாஜக?
மகாராஷ்டிர மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக சிவசேனாவில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனாவின் கூட்டணி ஆதரவு இல்லாமால் பாஜகவால் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவசேனாவோ சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவை அதிகரித்து வருகிறது. இதனால் அதிர்ந்து போன பாஜக தனது வழக்கமான நடவடிக்கையான குதிரை பேரத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.
எதிர்க்கட்சிகளை சீர்குலைத்து விலைக்கு வாங்கும் உத்தியை கூட்டணி கட்சியிடமே செயல்படுத்த முன்னெடுத்துள்ளது பாஜக. இதனிடையே அடுத்த 5 ஆண்டுகளுக்கு மகாராஷ்டிராவில் நானே முதலமைச்சராக இருப்பேன் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மேலும், ஆட்சியில் 2.5 ஆண்டுகள் சிவசேனாவுக்கு பங்கு கொடுப்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை எனவும் அமித்ஷாவும், உத்தவ் தாக்ரேவும் பேசியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பட்னாவிஸின் இந்த பேச்சு சிவசேனா கட்சியினரிடையேயும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமைப்பது என்ற சிக்கல் நீடித்து வருகிறது.
Also Read
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!