India
‘தாராவி’ காங்கிரஸின் கோட்டை... மீண்டும் நிரூபித்த தேர்தல் முடிவுகள்!
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ஆளும் கட்சியான பா.ஜ.க - சிவசேனா கூட்டணி அதிக தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகளும், பா.ஜ.க அமைச்சருமான பங்கஜ் முண்டே தோல்வி அடைந்துள்ளார்.
இந்த நிலையில் ஆசியாவிலேயே அதிக குடிசைகள் அமைந்திருக்கும் பகுதியான மும்பை தாராவி பகுதியில் 1999 முதல் கடந்த சட்டமன்ற தேர்தல் வரை காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்றி வந்திருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய தேர்தல் முடிவிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று தாராவி ‘காங்கிரஸின் கோட்டை’ என்று நிரூபித்துள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய தாராவி பகுதியில் 1999 முதல் 2019 வரை வர்ஷா கைக்வத் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். இந்த முறை காங்கிரஸின் வர்ஷா 53,954 வாக்குகளும், அனிதா தீபக் கௌதம் (பா.ஜ.க)- 42,093 வாக்குகளும் பெற்றனர்.
- சி.ஜீவா பாரதி
Also Read
-
உலகம் உங்கள் கையில் : “அனைத்து வகையிலும் வெற்றிமிகு மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு!” - முரசொலி புகழாரம்!
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
பொங்கல் திருநாள்; 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : உங்க ஊர் பேருந்து எங்கே நிற்கும் தெரியுமா?
-
திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!