India
“எதிர்க்கட்சியை குறைகூறுவதை நிறுத்திவிட்டு, பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கை எடுங்கள்” - மன்மோகன் சிங்!
இந்திய வங்கித் துறைகளில் மோசடி சம்பவம் அதிகரித்துவிட்டது. குறிப்பாக, கடன் பெற்று நாட்டைவிட்டுத் தப்பியோடுவதும் போலியான ஆவணங்களை கொண்டு கடன் பெற்று ஏமாற்றுவதும் வாடிக்கை நிகழ்வாகிவிட்டது. அண்மையில் கூட பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியான பி.எம்.வி வங்கியில் ரூ.2500 கோடி அளவிற்கு மோசடி நடந்திருப்பததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பா.ஜ.க அரசை நோக்கி, கேள்விகள் எழுந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதுதான் வங்கித் துறை வீழ்ச்சியைச் சந்தித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த மன்மோகன் சிங், நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அதில், “2018-ம் ஆண்டில் இந்தியப் பொருளாதார மதிப்பு 2.7 லட்சம் கோடி டாலராகஇருந்தது. இதை 2024-ஆம் ஆண்டுக் குள் 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த இலக்கு வைத்துள்ளனர். ஆனால், அந்த இலக்கை அடைவதற்குக் குறைந்தது 10 முதல் 12 சதவிகித வருடாந்திர வளர்ச்சியை இந்தியா கொண்டிருக்க வேண்டும்.
மோடி அரசோ ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சியில், வீழ்ச்சியைத் தான் சந்தித்து வருகிறது. பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டும் என்றால் பிரச்சனை என்ன என்பதை சரியாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடும் அறிவிப்புகளை பார்த்தால், பிரச்சனை என்ன என்பதே இந்த அரசுக்கு தெரியவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுகிறார்களே, தவிர பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவில்லை. பிரச்சனைகள் என்னவென்றே தெரியாமல் இவர்களால் தீர்வு காணவும் முடியாது.
தற்போதைய அரசானது எதிர்க்கட்சியினர் மீதும் எதிராளிகள் மீதும் குறைகூறுவதை நிறுத்திவிட்டு, பொருளாதார வீழ்ச்சிக்கான காரணிகளைக் கண்டறிந்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!
-
தீபாவளி பண்டிகை : சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் - கிளாம்பாக்கத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சிவசங்கர்!