India
முக்கிய வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி கேரள தலைமை நீதிபதியாக நியமனம் - ஜனாதிபதி உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.மணிக்குமாரை, கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரிஷிகேஷ் ராய், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனால் காலியான கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு, சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி மணிக்குமாரை நியமிக்க, உச்சநீதிமன்ற கொலிஜியம், பரிந்துரைத்திருந்தது.
கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று, நீதிபதி மணிக்குமாரை, கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணைச் செயலாளர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2006ம் ஆண்டு நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்ற எஸ்.மணிக்குமார் 2009ல் நிரந்தர நீதிபதியானார். இவர், நீர்நிலை ஆக்கிரமிப்பு, கட்டாய ஹெல்மட் அமல், மழைநீர் சேகரிப்பு போன்ற விவகாரங்களில் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"மனுக்களை கவனமாக பரிசீலனை செய்ய வேண்டும்" : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
”திமுக அரசினுடைய Brand Ambassodors மக்கள்தான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”சங்கிகளின் குரலாய் ஒலிக்கும் பழனிசாமி” : ஜூலை 14 ஆம் தேதி தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்!
-
ரூ.40.86 கோடி - 2,099 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
சிந்தனைத் திறன் குறித்து தவறாக தகவல் பரப்பிய நடிகர் ரோபோ சங்கர் மகள்! : விளக்கமளித்த TN Fact Check!