India
‘மிஷன் ஆதித்யா’ சூரிய அலைகளில் இருந்து செயற்கைக்கோளை பாதுக்காக்க உதவுமா? - மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்!
வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் 13ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் இஸ்ரோ இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில், “சந்திரயான் 2 விண்கலத்தால் கடைசி நேரத்தில் சிறிது பின்னடைவு அடைந்திருக்கிறோம்தான். ஆனால் அந்த பின்னடைவில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அடுத்தடுத்து செய்யக்கூடிய திட்டங்கள் அனைத்திலும் இந்திய விண்வெளித்துறை விஞ்ஞானிகள் வெற்றி பெறுவர். எந்த பின்னடைவும் நிரந்தமில்லை என தெரிவித்தார்.
மேலும், சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எனும் விண்கலம் தயாராகி வருவதாகவும், ஆதித்யா 24 மணிநேரம் சூரியனையும், 24 மணிநேரம் பூமியையும் சுற்றிவரும். சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு விசை உள்ள மையப்பகுதியில் இருந்து ஆதித்யா ஆய்வு செய்யும் எனவும் கூறினார்.
சூரியனில் ஏதேனும் நிகழ்வு ஏற்பட்டால் அது பூமிக்கு வருவதற்கு 2 நாட்கள் ஆகும். அதற்கு முன்னதாகவே மாற்றங்கள் குறித்து ஆதித்யா நமக்கு தெரிவிக்கும். சூரியனில் ஏற்படும் மாற்றங்களால் மேலே உள்ள செயற்கைக் கோள்களுக்கு ஆபத்து உள்ளது.
ஆகையால் அந்த மாற்றங்களை நமக்கு முன்கூட்டியே தெரிவிக்க ஆதித்யா உதவும். அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து செயற்கைக்கோள்களை பாதுகாக்க முடியும். சூரியனில் இருந்து வரும் வெப்ப அலைகள் செயற்கைக்கோள்கள் மீது விழுந்தால் அவைகள் பழுதாகவும் வாய்ப்புள்ளது” என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!