India
கர்நாடகா : 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் ஒப்புதல்!
நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
இதற்கிடையில் கர்நாடகாவில் 15 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.
இந்த நிலையில், சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விசாரணைக்கு உட்பட்டுள்ள கர்நாடகாவின் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதை அடுத்து தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்தது.
இதனையடுத்து, கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததால் வழக்கு மீதான விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Also Read
-
“ஒவ்வொரு வீட்டிலும் கலைஞரின் திட்டங்கள்.. மக்களுக்கான தலைவர்.. இதுதான் கலைஞர்” : கனிமொழி எம்.பி புகழாரம்!
-
“தொடர் பாலியல் வன்முறைகள்.. பெண்கள் பாதுகாப்பில் கோட்டைவிடும் முதல்வர் விஜய்” : முரசொலி விமர்சனம்!
-
சிறுபான்மையினர் சுதந்திரத்தில் கைவைத்த ‘விஜய்’, மக்களின் கேள்விக்கு பதில் சொல்வாரா? : சா.மு.நாசர் கேள்வி!
-
“கலைஞரின் புகழையும், சாதனைகளையும் எந்த கொம்பனாலும் அகற்றிட முடியாது!” : தவெக அரசுக்கு பி.வில்சன் கண்டனம்!
-
“நூலக அரங்கில் அகற்றப்பட்ட கலைஞரின் புகைப்படம்.. தவெக அரசின் காழ்ப்புணர்ச்சியா?.. குவியும் கண்டனங்கள்”