India
“பலமுறை சொல்லியும் கேட்கல..” : சொந்தப் பேரனையே ஆற்றில் வீசிக் கொன்ற பாட்டி - கர்நாடகாவில் வெறிச்செயல்!
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ பட்டியைச் சேர்ந்தவர் சாந்தம்மா. இவர் கடந்த 23ம் தேதி தனது சொந்த பேரனையே கொலை செய்துவிட்டதாக போலிஸார் கைது செய்துள்ளனர்.
சாந்தம்மா தனது பேரனை ஆற்றில் வீசி கொலை செய்துவிட்டதாக கூறியதையடுத்து அதிர்ச்சியடைந்த போலிஸார், ஆற்றுக்கு விரைந்துச் சென்று அங்கு சிறுவனின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆற்றில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்த சிறுவனின் உடலை போலிஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் சாந்தம்மாவின் மீது போலிஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
ஏன் தனது பேரனை கொலை செய்தேன் என சாந்தம்மா கூறிய காரணம் போலிஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை குறித்து சாந்தம்மா அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது மகள் தாங்கள் திருமணம் செய்து வைத்தவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வேறு ஒரு திருமணம் செய்துகொண்டு மங்களூருக்குச் சென்றுவிட்டார் என்று தெரிவித்துள்ளார்.
முதல் கணவருக்கு பிறந்த குழந்தையான ப்ரஜ்வாலை பாட்டியுடன் விட்டுச் சென்று நீண்ட நாட்களாகியும் திரும்ப அழைத்துப் போகவில்லை. குடும்ப சூழல் காரணமாக சிறுவனை வளர்க்கமுடியாமல் சாந்தம்மா தவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் குழந்தையை அழைத்துச் செல்லுமாறு பல முறை கூறியதாகவும், இதில் ஒருமுறை குழந்தையை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார். இதுபோல அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த சாந்தம்மா ஒருகட்டத்தில் ஆத்திரத்தில் பேரன் ப்ரஜ்வாலை பள்ளியில் இருந்து அழைத்துவரும்போது, ஹேமாவதி ஆற்றங்கரையில் கையில் மறைத்துவைத்திருந்த கயிற்றால் பேரனின் கைகளையும் கால்களையும் கட்டி ஆற்றில் வீசியுள்ளார்.
ஆற்றில் துடித்தபடியே மூழ்கி உயிரிழந்தான் சிறுவன் பிரஜ்வால். சிறுவன் முழ்கிய சில நிமிடங்களில் சாந்தம்மாவும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
இவர் ஆற்றில் மூழ்குவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டுள்ளனர். பின்னர் சாந்தம்மா போலிஸாரிடம் சரணடைந்துள்ளார். பாட்டியே சொந்த பேரனைக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஊடகங்களையும் விட்டுவைக்காத த.வெ.க... கண்டுகொள்ளாத விஜய்.. கொந்தளித்த பத்திரிகையார் அமைப்புகள்!
-
அனைவரையும் உள்ளடக்கியதே திராவிட எஞ்சின் ஆட்சி… ஒன்றுக்கும் உதவாததே பா.ஜ.க எஞ்சின் - முரசொலி தலையங்கம்!
-
மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க-விற்கு ஒரு MP சீட் ஒதுக்கீடு!
-
மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் “திறனகம்” : 5 முக்கிய அம்சங்கள் என்ன?
-
ஒன்றிய - மாநில உறவு : தமிழ்நாட்டின் குரலுக்கு ஆதரவு தந்த CM சித்தராமையா - நன்றி சொன்ன CM MK Stalin!