India
“பா.ஜ.கவுக்கு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் துரோகிகள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள்”- பா.ஜ.க தலைவர் விஷம பேச்சு
பாஜக ஆட்சியில் சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறை அதிகரித்துள்ளது. பாஜகவின் தலைமை பீடமாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார அமைப்புகள் இஸ்லாமிய மக்கள் மீதான வன்மத்தை நாளுக்கு நாள் தொடுத்து வருகிறது.
பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்தை சர்வசாதாரணாமாக பேசி வருகிறார்கள். இதனை பா.ஜ.க தலைமை கண்டிக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் எழுந்துள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா முஸ்லிம் மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தனர்.
என்னுடைய தொகுதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம் மக்கள் உள்ளனர். அவர்களிடன் நான் ஒருபோது வாக்கு கேட்கவில்லை. அனாலும் அதிகபடியான வாக்கு வித்தியாத்திலேயே வெற்றி பெறுகிறேன்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ நான் இஸ்லாமியர்கள் குறித்து பேசுவதை ஊடகங்கள் செய்தியாக்க வேண்டும் என்பதால் தான் பொது இடத்தில் இப்படி பேசுகிறேன் என பகிரங்கமாக தெரிவித்த அவர், இந்தியாவின் மீது தேசப்பற்று உள்ள இஸ்லாமியர்கள் பா.ஜ.க-வுக்கு தான் வாக்களிப்பார்கள். அவ்வாறு வாக்களிக்காத இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவானவர்கள், அவர்கள் தேச துரோகிகள்' என்று தெரிவித்தார்.
முன்னதாக நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில், இஸ்லாமியர்கள் பாஜகவின் வேட்பாளராக நிற்பதற்கு பா.ஜ.க அலுவலகத்தை 10 ஆண்டுகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்றும் அவர் பேசினார்.
அவரின் இதுபோல பேச்சுக்கள் தொடர்ந்து சிறுபான்மையினர் மக்களுக்கு எதிராக உள்ளது என பலர் தங்களின் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். மேலும் இது முஸ்லிம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
-
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
-
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
-
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
-
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!