India
கோதாவரி ஆற்றில் கவிழ்ந்த சுற்றுலா படகு - 22 பேர் மாயம் : தொடரும் மீட்புப் பணி
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்தனர். கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து மூழ்கிய 61 பேரில் 12 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம தேவிபட்டணம் பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் படகு ஒன்றில் 60 பேர் நேற்று சுற்றுலா மேற்கொண்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. படகில் அளவுக்கு அதிகமாக நபர்கள் பணித்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் பாதுகாப்பு உடைகள் எதுவும் இல்லாத நிலையில் ஆற்றின் மையப்பகுதிக்கு சென்றபோது ஆற்றின் வேகத்தால் படகு கவிழ்ந்திருக்கும் என்கிற தகவலும் வெளிவந்துள்ளது. நீரில் மூழ்கிய 61 பேரில் இதுவரை 27 பேரை மீட்பு தேசிய பேரிட மீட்புப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். மீட்பு பணியில் 2 குழுக்கள் ஈடுபட்டுள்ளது. மீதமுள்ள 22 பேரை தேடும் பணி மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் கோதாவரி ஆற்றில் அனைத்து படகு சேவைகளையும் ரத்து செய்யபடும் என்றும் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கச்சனூர் கோதாவரி ஆற்றுப்பகுதியில் கடந்த ஆண்டும் இதேபோல் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 21 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதும் அதே இடத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.க தயங்காது!” : த.வெ.க அரசுக்கு உதயநிதி எச்சரிக்கை!
-
தமிழகத்தை உலுக்கிய கும்மிடிப்பூண்டி 3 வயது வடமாநில சிறுமி வன்கொடுமை.. வேடிக்கை பார்க்கும் சிங்கப்பெண் படை
-
“நாடாளுமன்றத் தேர்தலின்போது மட்டும் ஆதரவைத் தேடுவதற்கு வெட்கமாக இல்லையா?” : காங்கிரசை சாடிய முரசொலி!
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!