India
தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம் - ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தகவல்
தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் ஊடுருவியதாகவும் தாக்குதல் நடத்த திட்டமிருப்பதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து சிலரை கைது செய்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவத்தின் தென்பிராந்திய ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், '' பயங்கரவாதிகள் தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்தலாம் என தகவல் கிடைத்துள்ளது. பயங்கரவாத செயல்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குஜராத்தின் சர்ச் கிரீக் பகுதியில் கேட்பாரற்ற படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.
Also Read
-
“ரீல்ஸ் முதலமைச்சரே... அடக்குமுறைக்கு கழக இளைஞர்கள் அஞ்சமாட்டார்கள்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
-
“முதல்வர் விஜய் பேச்சு ஆணவத்தின் உச்சம் ; அதிகாரத் திமிரின் வெளிப்பாடு” : கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
“FIFA உலகக்கோப்பை.. யாரும் தொட முடியாத இரட்டை சாதனை.. மிரட்டும் ரொனால்டோ” : முழு விவரம் அறிக!
-
கோவையில் பரபரப்பு: பிரேக் பழுதடைந்த பேருந்து - 40 பேரின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!
-
“கழக இளைஞர்களை அச்சுறுத்தலாம் என நினைத்தால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!