India
2 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்திய மாருதி சுசுகி நிறுவனம் : பொருளாதார மந்தநிலை உச்சகட்டம்!
கார் விற்பனை மந்த நிலையில் உள்ளதால், வருகிற 7 & 9 ஆகிய தேதிகளில் தனது தொழிற்சாலைகளை மூடுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவின் பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம், ஹரியானாவின் குருகிராம் மற்றும் மனேசரில் உள்ள தனது தொழிற்சாலைகளை வருகிற 7 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது.
அன்றைய தினங்களுக்கு மட்டும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4% சரிவைச் சந்தித்துள்ளதால் இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக மாருதி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Also Read
-
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி - பதில் சொல்லாத மோடி : முரசொலி!
-
ரூ.36.6 கோடியில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல் மதுரை Master Plan 2044 வரை... அசத்திய முதலமைச்சர்!
-
SWAYAM தேர்விலும் தமிழக மாணவர்களிடம் வன்மத்தை கொட்டும் ஒன்றிய பாஜக அரசு.. ஆதாரத்துடன் சு.வெ. கண்டனம்!
-
திட்டப் பணிகள் திறப்பு முதல் 1.77 லட்ச பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் வரை... மதுரையில் முதலமைச்சர்!
-
மதுரை பந்தல்குடி வாய்க்காலில் மேம்பாட்டுப் பணிகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!