India

தொடர் ஏற்றத்தில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை: இன்றைய நிலை?

இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டில் வர்த்தம், தொழில் வளர்ச்சி, முதலீடுகள், வேலை வாய்ப்புகள் என அனைத்துத் துறைகளும் முற்றிலும் சிதைந்து போயுள்ளன.

அதுமட்டுமின்றி, பொதுமக்களை நேரடியாக தாக்கும் வகையில் இந்த பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளது. நடுத்தர மக்கள், வியாபாரிகள் என தினமும் உயரும், விலை உயர்வினால் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.

தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை திடீரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும் இருந்து வருகின்றது.

அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 74.86 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 69.04 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இரண்டாவது நாளாக மாற்றமின்றி உள்ளது. நாட்டின் உள்ள அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு முக்கிய காரணமாக அமைகிறது என பொருளாதார வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.