India
“காஷ்மீர் சட்டப்பிரிவு 370 குறித்து அம்பேத்கர் என்ன சொன்னார் தெரியுமா ?” : மாயாவதிக்கு டி.ராஜா பதில் !
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, காஷ்மீரில் வீட்டுச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் முக்கிய தலைவர்களை விடுவிக்கும்படி, டெல்லியில் தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்ற ஆர்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
காஷ்மீரின் தற்போதைய நிலையை ஆய்வு செய்ய காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்ட 11 எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று முன்தினம் ஸ்ரீநகர் சென்றனர்.
ஆனால், விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்ட அவர்கள், அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காஷ்மீர் மக்கள் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அனுபவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனுமதி பெறாமல் காஷ்மீர் சென்றிருக்கக்கூடாது எனவும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ அம்பேத்கர் வரவேற்கவில்லை எனவும் தெரிவித்திருந்தார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய டி.ராஜா, “காஷ்மீர் மக்கள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். உங்களோடு நாங்கள் இருக்கிறோம் என்ற செய்தியை அவர்களுக்கு தெரிவிக்கும் ஒரு சிறந்த நோக்கத்துடன்தான் அங்கு சென்றோம்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ அம்பேத்கர் வரவேற்கவில்லை என்று சரியான புரிதல் இல்லாமல் மாயாவதி பேசுகிறார். அரசியலமைப்புச் சபையின் நடவடிக்கைகளைப் சரியாக படிக்காமல், டாக்டர் அம்பேத்கரை அரசியல் சர்ச்சையில் இழுக்கக் கூடாது.
அம்பேத்கர் தனது வாழ்நாள் முழுவதும் அனைத்து இந்துத்துவா சக்திகளையும் எதிர்த்துப் போராடினார். இதை மாயாவதி புரிந்துகொள்வதோடு, அவரை தலித் மக்களின் பிரதிநிதி என நினைத்துக்கொண்டிருக்கும் மக்களிடமும் அவர் சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
மும்முரமாக நடைபெறும் தேனாம்பேட்டை – சைதாப்பேட்டை மேம்பாலப் பணி! : அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு!
-
“முதலமைச்சர் கோப்பை 2025-ல் 16 லட்சம் இளைஞர்கள் பங்கேற்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
“நாட்டிற்கு பெருமை சேருங்கள்! களம் நமதே! வெற்றி நமதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
”குடும்பச் சண்டையில் உள்ள வன்மத்தை இளைஞர்கள் மீது கொட்டாதீர் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!
-
முதலமைச்சர் கோப்பை – 2025 நிறைவு! : கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!