India
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்... ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் சாலையோரத்திலேயே பிரசவம்!
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கர்ப்பிணிப் பெண் சாலையோரத்திலேயே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் கமலா பாய் என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனை செல்வதற்காக ‘ஜனனி எக்ஸ்பிரஸ்’ ஆம்புலன்ஸுக்கு அழைத்துள்ளனர்.
ஆனால் வெகுநேரமாகியும் ஆம்புலன்ஸ் ஏதும் வரவில்லை. இதனால், அப்பெண்ணின் கணவர் இருசக்கர வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்துப் புறப்பட்டுள்ளனர். ஆனால் நடுவழியிலே அந்தப் பெண் தன் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
சாலையோரத்திலேயே பிரசவம் நடைபெற்று குழந்தை பெற்ற கமலா பாய், பின்னர் ஷாகாபூர் சமூக நலக்கூடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தாய்க்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே குழந்தையை பிரசவித்த பின்னர் உறவினர்கள் தாயையும், குழந்தையையும் அழைத்து வந்ததாகவும் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் அங்கு பணியிலிருக்கும் செவிலியர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை : Köln பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர்!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!
-
அரசு கல்லூரியில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் : அமைச்சர் கோவி.செழியன் தகவல்!
-
Insta-வில் வெளியிட்ட வீடியோ.. ரவுடியை திருக்குறள் வாசிக்க வைத்து நூதன தண்டனை கொடுத்த தூத்துக்குடி போலீஸ்!