India
காஷ்மீரில் இந்திய விமானப்படை விமானத்தை இந்திய வீரர்களே சுட்டார்களா? : விசாரணையில் அம்பலம்!
கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பயணித்த பேருந்து மீது, வெடிமருந்துடன் தீவிரவாதி ஒருவன் மோதி தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினான். இதில் 44 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லையில் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. இதையடுத்து பாகிஸ்தான் ராணுவம் இந்தியா மீது நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால் இருநாட்டு எல்லையில் போர் பதற்றம் அதிகரித்தது.
இதனால் இந்திய எல்லைப்பகுதி இரவு பகலாக இந்திய விமானப்படையால் கண்காணிக்கப்பட்டு வந்தது. அப்போது இந்திய விமானப் படையின் எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில், விமானத்தில் பயணம் செய்த விமானி உட்பட 6 பேர்கள் உயிரிழந்தனர். பழிவாங்கும் விதமாக ஹெலிகாப்டரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக கூறப்பட்டது. ஆனால், இந்தியா தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
விசாரணையின் முடிவில், இந்திய விமானப் படையின் எம்.ஐ 17 ரக ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியது இந்திய வீரர்கள் எனத் தெரிய வந்துள்ளது. 5 விமானப்படை வீரர்களை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது. அவர்களுக்கான தணடனையை விமானப்படை தலைமையகம் விரைவில் அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டரை இந்திய இராணுவ வீரர்களே தவறுதலாக சுட்ட விவகாரம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!