India
பாகிஸ்தானின் அடுத்த திட்டம் இதுதான் - தடுத்து நிறுத்த தயார் நிலையில் இருப்பதாக இந்தியா தகவல்!
ஜம்மு காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நடத்த, பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக காஷ்மீர் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்துகளை வழங்கக்கூடிய சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து கடந்த ஆக,.5ம் தேதி மத்திய அரசு நாடளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றியது.
இதற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இதனை சர்வதேச பிரச்னையாக்க சீனாவை நாடி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் முறையிட்டுள்ளது.
இதற்கிடையில் ஜம்மு காஷ்மீர் எல்லையான பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததில் 3 பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்திய தரப்பில் 5 வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால், இந்திய அந்த தகவலை மறுத்துள்ளது.
நிலமை இப்படி இருக்க, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக, காஷ்மீர் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், காஷ்மீரில் விதிக்கப்பட்ட தடைகள் படிப்படியாக தளர்வுபடுத்தப்படும் என்றும் கூறிய அவர், திங்கள் கிழமை முதல் பள்ளிகள் செயல்பட தொடங்கும் எனவும் தெரிவித்தார்.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!