India
‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’’ திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடையாது - ராம்விலாஸ் பாஸ்வான்
நாடு முழுவதும் உள்ள எந்த நியாயவிலை கடையிலும் சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை நுகர்வோர் வாங்கி கொள்ளும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். முதல் கட்டமாக குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
பின்னர் பேசிய ராம்விலாஸ் பாஸ்வான், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். எனவே, ''ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு'' திட்டத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க முடியாது.
அடுத்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து மாநிலங்களையும் திட்டத்தில் சேர்த்து தேசிய அளவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். அடுத்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் தேசிய அளவில் ''ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு'' திட்டம் செயல்படுத்தப்படும்” இவ்வாறு தெரிவித்தார்.
Also Read
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!